பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை

பூங்கோதை 2017-09-05 11:01:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடனான பேச்சுவார்த்தை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் சியாமென் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் மிஷெல் டெமர், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர்  ஜேக்கப் ஜுமா ஆகியோர் இதில் கூட்டாக பங்கெடுத்தனர்.

பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புக்கான புதிய 10 ஆண்டுகளை முன்னிட்டு, தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழு மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை ஒன்று திரண்டு பாடுபட்டு, பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புக்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

மேலும், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழு மற்றும் புதிய வளர்ச்சி வங்கி பெற்றுள்ள சாதனைகளுக்கு, பிற பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினார். பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்த இரு நிறுவனங்கள் மேலதிக பங்காற்றும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை

இதனையடுத்து, பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு விழாவின் துவக்க விழா மற்றும் பண்பாடுக்கான நிழற்படக் கண்காட்சியில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் அதே நாள் கூட்டாகக் கலந்து கொண்டனர். 

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்