உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்:ஷிச்சின்பிங்

மதியழகன் 2017-09-05 15:02:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்:ஷிச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள் சியாமென் நகரில் உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்து, 9ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள்-வளரும் நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை ஆகியவற்றின் சாதனைகளை அறிமுகம் செய்தார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றி அவர் பேசுகையில்

நடப்பு உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது சியாமென் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. திறப்புடன் அனைவரையும் உள்ளடக்குவது, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி அடைவது என்ற பிரிக்ஸ் கருத்துக்கள் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சியாமென் மாநாட்டை புதிய துவக்கமாக கொண்டு, மேலும் நெருக்கமாகவும் மேலும் பரந்த அளவிலும், மேலும் பன்முகமாகவும் இருக்கும் நெடுநோக்கு வாய்ந்த கூட்டாளியுறவை கூட்டாக உருவாக்கி, பிரிக்ஸ் ஒத்துழைப்பின் 2ஆவது பொன்னிற பத்தாண்டுக்காலத்தை திறந்து வைக்க பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மனவுறுதியுடன் பாடுபடுவர் என்று சுட்டிக்காட்டினார்.

வளர்ந்து வரும் சந்தைகள்-வளரும் நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை பற்றி பேசுகையில்

பிரிக்ஸ் ஐந்து நாடுகள், எகிப்து, மெக்சிகோ, தாய்லாந்து, தஜ்கிஸ்தான், கினி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக பன்னாட்டு வளர்ச்சி ஒத்துழைப்புத் திட்டங்களை கூட்டாக விவாதித்துள்ளனர்.பரந்த அளவிலான வளர்ச்சிக் கூட்டாளியுறவை அமைத்து,  2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சித் திட்டங்களின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பதவி வகிக்கும் தென்னாப்பிரிக்கா, ஜோகனஸ்பெர்க்கில் 10ஆவது உச்சி மாநாட்டை நடத்தும். பிற தரப்புகளுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு பிரிக்ஸ் ஒத்துழைப்பை முன்னெடுக்க சீனா விரும்புவதாக என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்