பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்

2017-08-21 14:56:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகளின் 7ஆவது கூட்டம் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியே ச்சி இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். தென் ஆப்பிரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு விவகாரப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.உலக ஒழுங்கு, பயங்கரவாத எதிர்ப்பு, இணைய மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி முதலியவை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்

சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியே ச்சி இக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், பிரிக்ஸ் நாடுகள் ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை அதிகரித்து, பல்வேறு துறைகளிலான எதார்த்த ஒத்துழைப்பை முன்னேற்றி, ஒன்றுபட்டு செயல்பட்டு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகளிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகளுக்கு ஆற்றலையும், விவேகத்தையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட உலக மற்றும் பிரதேசப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில், பிரிக்ஸ் நாடுகள் ஒன்றுபட்டு, மேலும் வலுவான பங்காற்ற வேண்டும் என்று இந்தியத் தேசிய பாதுகாப்பு அலோசகர் அஜித் டோவால் இக்கூட்டத்தில் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்