பிரிக்ஸ் ஒத்துழைப்பை இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டும்:வாங்யீ
பிரிக்ஸ் என்பதே, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியவற்றுக்கிடையேயான முக்கிய ஒத்துழைப்பு முறையாகும். ஐந்து பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எண்ணிக்கையில் அதிகரிப்பு மட்டுமல்லாமல், தர அளவில் மேம்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 21ஆம் நாள் நியூயார்க்கில் தெரிவித்தார்.
செப்டம்பர் 21ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையேயான கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பல தரப்பு அமைப்புமுறைப் பணிகளை பிரிக்ஸ் நாடுகள் இடைவிடாமல் முன்னேற்ற வேண்டும் என்றும் வாங்யீ வலியுறுத்தினார்.