பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும்: இந்திய அறிஞர்கள்

மதியழகன் 2017-09-04 16:07:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது சீனாவின் சியாமென் நகரில் நடைபெறுகின்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் அதேசமயத்தில், தங்களது சமூக வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நேரு பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுத் துறையில் முனைவர் பட்டம் படித்து வருகின்ற அபிஷேக் பிரதாப் சிங் பேட்டி அளித்த போது

பிரிக்ஸ் நாடுகளில் பத்தாண்டுகளில் பொற்கால வளர்ச்சி நிகழ்ந்தது. எதிர்காலத்தில், பொருளாதார துறையிலான ஒத்துழைப்பு இன்னும் பெரிதாகும். சில பிரிக்ஸ் நாடுகளில் அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்கு நிதித் தேவை அதிகம். அதற்கு புதிய வளர்ச்சி வங்கி முதலீடு செய்வதோடு 23 கடன் திட்டங்களை வகுத்துள்ளது. இவற்றில் இந்தியாவிற்கு 7 கடன் திட்டங்கள் கிடைக்கும். கிராமப்புறங்களின் அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்கு அது அதிகமாக ஒதுக்கீடு செய்ய உள்ளது. இந்திய அரசு இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்.

இந்தியாவில் தில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சீன மொழி துறைச் சேர்ந்த பேராசிரியரும் சீன-இந்திய உறவின் ஆய்வு நிபுணருமான  டாக்டர் சோஃபியா சாட்டர்ஜீ அம்மையார் பேசுகையில்,

புதிய வளர்ச்சி வங்கி,  பிரிக்ஸ் நாடுகளுக்கு மட்டுமல்லாமல், பிற வளரும் நாடுகளுக்கும் இயக்க சக்தியை அளிக்கும். தற்போது, பிரிக்ஸ் நாடுகளின் கிராமப்புறங்களில் தகவல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் அதிக மேம்பாடு தேவைப்படும். முதலீடு என்ற பார்வையில், பிரிக்ஸ் நாடுகளின் கிராமப்புறங்களின் அடிப்படை வளர்ச்சி நன்மை பெறும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது

பிரிக்ஸ் முறை, தெற்கு மற்றும் வடக்கு இடையிலான உறவை ஒருங்கிணைப்பதிலும்,  வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும்  இடையிலான பொருளாதார வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதிலும் பங்காற்றும். சுற்றுச்சூழல், மனித வளர்ச்சி, சுகாதாரம், குழந்தை உரிமைகள், உழைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய விவகாரங்களிலும், பிரிக்ஸ் முறை பங்களிப்பை அளிக்கும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்