“ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 5ஆம் ஆண்டு நிறைவு

ஜெயா 2018-08-27 11:32:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதையைக் கூட்டாக கட்டியமைப்பது என்ற முக்கிய முன்மொழிவை, 2013ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். கடந்த 5 ஆண்டுகளாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், பல சாதனைகளைப் பெற்றுள்ளது. அதிகமான மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கு இது உதவி செய்துள்ளது. மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்திற்கு உந்து ஆற்றலை வழங்கியுள்ளது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் மற்றும் ஆழமான செல்வாக்கு, சர்வதேச சமூகத்தில் பெற்று வரும் பாராட்டு மற்றும் ஆதரவுகள் அதிகரித்து வருகின்றன. சீனா மற்றும் உலகத்தின் கூட்டு முயற்சியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தின் ஆற்றல் மேலும் வலிமையாகவும், எதிர்காலம் மேலும் பிரகாசமாகவும் இருக்கும். உலகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இது மேலதிகமான பங்கு ஆற்றும் என்பது உறுதி என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்