ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றிய செய்தி விளக்கம்

ஜெயா 2018-08-28 14:09:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு, “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” முன்மொழிவை முன்வைக்கப்பட்ட 5ஆம் ஆண்டு நிறைவாகும். இது குறித்து, சீன அதிகாரிகள் 27ஆம் நாள் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக, இந்த முன்மொழிவு, விருப்பத்திலிருந்து, செயலாக மாறி, பெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. புதிய நிலைமையை எதிர்நோக்கி, விரிவான கலந்தாய்வு, கூட்டு பங்கெடுப்பு மற்றும் பயன்களின் பகிர்வு என்ற கோட்பாட்டை சீன அரசு நிலைநிறுத்தி, உயர் தரம் மற்றும் வரையறையுடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னேற்றும் என்று கூறினார்.

இந்த முன்மொழிவு வழங்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகளில், உலகில் ஆக்கப்பூர்வமான மறுமொழி மற்றும் பங்களிப்பு கிடைத்துள்ளது. தற்போது, இந்த முன்மொழிவும், விரிவான கலந்தாய்வு, கூட்டு பங்கெடுப்பு மற்றும் பயன்களின் பகிர்வு என்ற மையமான கருத்தும், ஐ.நா உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்பு முறை சாதனை ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

புள்ளிவிபரங்களின்படி, 2018ஆம் ஆண்டு ஜூன் திங்கள் வரை, சீனாவுக்கும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளுக்கும் இடையிலான சரக்கு வர்த்தக தொகை, 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. நெடுகிலுள்ள நாடுகளில் கட்டியமைக்கப்பட்ட வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்களில் செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை 2000 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாகும். உள்ளூர் பிரதேசத்துக்கு பல இலட்சத்துக்கு மேலான வேலை வாய்ப்புகளை வழங்கி, பல நூறு கோடி அமெரிக்க டாலர் வரிவருமானத்தை விளைவித்துள்ளது. மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானப் பணித் தலைமைக் குழு அலுவலகத்தின் துணை இயக்குநர் நிங் ஜிசே 27ஆம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம், நெடுகிலுள்ள நாடுகளில் ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும். கூட்டு வெற்றி பெறும் என்று கூறினார்.

வளர்ந்த நாடுகள், பலதரப்பு நிதி நிறுவனங்கள், இக்கட்டுமானத்தில் கலந்து கொள்வதை வரவேற்கிறோம் என்று சீன வணிக துறை துணை அமைச்சர் ச்சியான் கேமிங் தெரிவித்தார். தவிரவும், தற்போது, பிரான்ஸ், கனடா, ஜப்பான், சிங்கப்பூர் முதலிய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் சீனா 3ஆவது தரப்புச் சந்தை ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளது. தொடர்புடைய நாடுகள் மற்றும் தமது தொழில் நிறுவனங்களுடன் 3ஆவது தரப்புச் சந்தை ஒத்துழைப்பு அளவை விரிவாக்க சீனா விரும்புவதாக நிங் ஜிசே கூறினார்.

எதிர்காலத்தில், விரிவான கலந்தாய்வு, கூட்டு பங்கெடுப்பு மற்றும் பயன்களின் பகிர்வு என்ற கோட்பாட்டையும், சந்தைப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச ஒழுங்கையும் சீனா தொடர்ந்து நிலைநிறுத்தி வரும். ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியை இலக்காகக் கொண்டு, உயர் தரம் மற்றும் வரையறையுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னேற்றும் என்று சீனாவின் அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்