21ஆவது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை குறித்த சர்வதேச தொடர்பு மன்றக் கூட்டம்

ஜெயா 2018-09-20 14:24:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் 19ஆம் நாள், சீன ஊடக குழுமமும், குவாங்தோங் மாநில அரசும், கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்யும் 21ஆவது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை பற்றிய 2ஆம் சர்வதேச தொடர்பு மன்றக் கூட்டம் சூஹை நகரில் துவங்கியது.

புதிய யுகம், புதிய பட்டுப்பாதை, புதிய தோற்றம் என்பது, இம்மன்றக் கூட்டத்தின் தலைப்பாகும். வரலாற்றைப் பின்பற்றி, அதற்கு புதிய கருத்தை வழங்குவது அதன் அம்சங்களை குறிக்கோளாகும்.

21ஆவது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதையைக் கூட்டாக கட்டியமைக்கும் முன்மொழிவை 5 ஆண்டுகளுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். இது, பழைய பட்டுப்பாதைக்கான புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக, பட்டுப்பாதை நெடுகிலுள்ள நாடுகளுடன் சீனாவின் வர்த்தக தொகை மொத்தமாக 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. வெளிநாடுகளில் நேரடி முதலீட்டுத் தொகை 6 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. நெடுகிலுள்ள நாடுகளுடன் 80க்கும் மேலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்களை சீனா கட்டியமைத்துள்ளது. பல வேலை வாய்ப்புகளை வழங்கி, நெடுகிலுள்ள மக்களுக்கு மாபெரும் நலன்களை விளைவித்துள்ளது.

இத்தாலி நாட்டின் டுரின் நகரிலுள்ள கன்ஃபுசியஸ் கழகத்தின் இத்தாலிய தரப்பு தலைவர் ஸ்தெஃபனியா துவக்க விழாவில் கூறுகையில்,

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, ஒரு மாபெரும் இலட்சியமாகும். நீண்டகால பணி இதுவும் ஆகும். நட்பு மற்றும் தொடர்பு ரீதியிலான பாலத்தை இது கட்டியமைத்துள்ளது. உலகில் அமைதி மற்றும் வளர்ச்சியை நேசிக்கும் நாடுகள் மற்றும் மக்களால் வரவேற்கப்பட்டு, பேணிகாக்கப்படும் என்று தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியோங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், உலகம் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரிய மாற்றங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. வணிகப் பாதையும், பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் நாகரிகப் பேச்சுவார்த்தையின் பாதையும் பட்டுப்பாதை ஆகும். நாம் கையோடு கை கோர்த்து, பரிமாற்றம் மற்றும் பரஸ்பர படிப்பில் கடல்வழி பட்டுப்பாதை எழுச்சியைப் பரப்பி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியில் புதிய உயிராற்றலை உருவாக்கி, மனிதகுலத்தின் அருமையான புதிய எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்