உலகப் பொருளாதார ஒருமைப்பாடு

சிவகாமி 2019-11-06 10:11:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 5ஆம் நாள், 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது பொருளாதார உலக மயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய 3 முன்மொழிவுகளை முன்வைத்த அவர் வெளிநாட்டுத் திறப்பு பற்றிய 5 முக்கிய நடவடிக்கைகளைச் சீனா முன்னேற்றி வருகின்றது என்று தெரிவித்தார். ஷிச்சின்பிங்கின் இந்தக் கருத்துகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இது பற்றிக் கருத்து தெரிவித்த

இந்தியத் தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் கடல் வள பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவர் ஷாஜி முகமது இப்பொருட்காட்சி உள்ளிட்ட மேடைகள், சீன-இந்தியப் பொருளாதார மற்றும் வணிகத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்தியக் கடல் பொருட்கள் மேலதிகமாக சீன நகரங்களில் நுழைய வழி வகுக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்குக்குச் சீனா தலைமை தாங்கி வருவதை ஷிச்சின்பிங்கின் உரை வெளிக்காட்டியுள்ளதாக பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ரமோன் லோபஸ் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்