திறப்புத் தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தின் கட்டுமானத்தை முன்னேற்றி வரும் சீனா

வான்மதி 2019-11-05 17:45:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் நிகழ்த்திய முக்கிய உரையானது, திறப்புத் தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தின் கூட்டுக் கட்டுமானத்துக்கும், மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்துக்கும் சீனத் தனிச்சிறப்புமிக்க இயக்காற்றலை அதிகமாக வழங்கி, பெரிய நாடு ஒன்றின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

திறப்பு என்பது, தற்கால சீனாவின் தெளிவான அடையாளமாகும். இறக்குமதிப் பொருட்காட்சி நடத்துவது என்பது, சீனா முனைப்புடன் உலகிற்குத் தனது சந்தையைத் திறந்து வைக்கும் முக்கியச் செயலாகும். நடைமுறைக்கு வந்து வரும் சீனாவின் திறப்பு நடவடிக்கைகள், உலகிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி மனவுறுதியுடன் செயல்படும் சீனாவின் பொறுப்புணர்வை நிரூபித்ததோடு, பல்வேறு நாடுகள் சீனா கொண்டு வரும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்கும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புவாதம், ஒருதரப்புவாதம் ஆகியவை தலைதூக்கி, பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பன்னாட்டுச் சமூகங்கள் ஆழ்ந்த சிந்தனையுடன் தீர்வுமுறையை தேடிக் கொண்டு வருகின்றன. இது குறித்து தெளிந்த மதிப்பீடு மற்றும் புரிந்துணர்வைக் கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அலைகளையும் ஆபத்தான பாறைகளையும் சந்தித்தாலும் கூட, முன்னோக்கி பாய்ந்து செல்லும் பெரிய ஆற்றின் போக்கினை யாராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வழங்கி பகுப்பாய்வு மற்றும் கணிப்பு, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விதி மற்றும் திசையை சரியாக அறிந்து கொண்டு தெரிவு செய்வதற்குத் துணைபுரியும்.

முன்பை விட மேலும் திறப்புமிக்க சீனாவுக்கு நெகிழ்தன்மை மிக்க பொருளாதார ஆதாரம் உண்டு என்பது உறுதி. இந்த அடிப்படையில், சீனாவின் தொடர்ச்சியான திறப்பு மீதும் சீனாவின் எதிர்காலம் மீதும் நம்பிக்கை கொள்வதாக உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவுநரும் செயல் தலைவருமான க்லாவ்ஸ் ஸ்வாப் பல முறை தெரிவித்துள்ளார்.

முன்பை விட மேலும் திறப்பான சீனா, பல்வேறு நாடுகளுக்கு சந்தை வாய்ப்புகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகமாக கொண்டு வந்து, திறப்புத் தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தின் கட்டுமானத்தையும் மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தையும் முன்னேற்றும் முக்கிய ஆற்றலாக மாறும் என நம்பப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்