ஒளிவீசும் சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம்

வான்மதி 2019-11-05 18:52:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி மேலும் பிரகாசமாக இருக்கும் என நம்புகின்றேன் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காயில் துவங்கிய 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் தெரிவித்தார். பொருளாதாரத்தின் நீண்டகால சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தும் சீனாவின் சுய நம்பிக்கை மற்றும் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியதோடு, இது பல்வேறு துறையினர்களிடையில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, பாதகமான நிலைமையில் சீராக செயல்பட்டு வரும் சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதார மீட்சிக்கு பெரும் நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, தொழில் புரிவதற்கான சூழல் பற்றிய உலக தரவரிசையில் சீனா 15 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனா, மிகப் பெரிய சந்தையாகும். தெளிவான தொலைநோக்கு திட்டம், வளைந்து கொடுக்கும் கொள்கைகள், தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஆகியவை சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சிக்கு முறைமை சார் உத்தரவாதத்தை அளித்துள்ளன.

சந்தை திறப்பை விரிவாக்குவது, திறப்பு கட்டமைப்பைச் சீராக்குவது, தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவது, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்தை முன்னேற்றுவது ஆகியவற்றில் இடைவிடாமல் செயல்பட்டு வரும் சீனா, உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து இன்னல்களைச் சமாளித்து கூட்டாக முன்னேறும் மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்