வளரும் நாடுகளுக்கு நன்மை பயக்கும் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி

வான்மதி 2019-11-06 19:03:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான காட்சியிடத்தில், வளரும் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பல்வேறு முயற்சிகளுடன் தங்கள் நாட்டின் தனிச்சிறப்பு மற்றும் போட்டியாற்றல் மிக்க பொருட்களைக் காட்சிப்படுத்தி, சீனச் சந்தையில் செயல்பட விரும்பும் பேரார்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகளவில் பொருட்களை வாங்கி முழு உலகிற்கும் நன்மை தருவதற்குரிய மேடையாக சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, பல்வேறு நாடுகளுக்கு, குறிப்பாக பொருளாதார அடிப்படை பலவீனமாக உள்ள நாடுகளுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

முதலாவது பொருட்காட்சியைப் போல் நடப்பு பொருட்காட்சியிலும், வளர்ச்சி குன்றிய நாடுகளின் வணிகர்களுக்கு இரண்டு இலவச காட்சியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு அவற்றின் வினியோகம் மற்றும் தேவைக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பயன்களின் பகிர்வு என்பதன் காரணமாக, 150க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 3000க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியால் ஈர்க்கப்பட்டுள்ளன.

பயன்களின் பகிர்வு என்பதை மையக் கருத்தாகக் கொண்ட இறக்குமதிப் பொருட்காட்சி மூலம், வங்கதேசம், சாம்பியா போன்ற வளரும் நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் சீனக் கடைகளில் நுழைந்துள்ளன.

மேலும், சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் வணிகப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை வழங்கப்படும் அதேவேளை, பண்பாடு மற்றும் கருத்துகளும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பேரம்பேசும் போக்கில், வளரும் நாடுகள் வணிக வாய்ப்புகளைக் காணும் போது, உலகமயாக்கத்தின் பயன்களைப் பெறுவதில் அவற்றுக்கு சீனா உதவியளிக்கும் நல்லெண்ணத்தையும் சீனா, வளரும் நாடுகளின் நம்பத்தக்க மற்றும் நேர்மையான கூட்டாளியாகும் என்பதையும் இப்பொருட்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்