திறப்பு மற்றும் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றிய இறக்குமதிப் பொருட்காட்சி

ஜெயா 2019-11-11 14:26:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி 10ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நிறைவடைந்தது. இதில் பெறப்பட்டுள்ள செழுமையான சாதனைகள், பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு புதிய இயக்கு ஆற்றலை ஊட்டியுள்ளது. அதோடு, இது, உலகின் திறப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளர்ச்சிக்கும் துணை புரியும்.

முதலாவதாக, இப்பொருட்காட்சி, வணிகப் பொருட்கள் மற்றும் சேவையின் விற்பனையின் மூலம், வர்த்தக உலகமயமாக்கம் மற்றும் உலகப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றியுள்ளது. அதோடு, இது, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம், சிந்தனையை வளர்த்து, பொது கருத்தைத் திரட்டி, வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, பொருளாதார உலகமயமாக்கத்தை ஆதரிக்கும் வலிமை மிக்க ஆற்றலைக் காட்டுகிறது. குறிப்பாக, இது, உலகிற்கு “பகிர்வு” என்ற கருத்தை முழுமையாகக் காட்டி, மனிதகுலத்தின் பொது சமூகத்தை உருவாக்கும் சிறப்பான நடைமுறையாக உள்ளது.

இரண்டாவது முறையாக நடைபெற்ற இப்பொருட்காட்சி, சீனச் சந்தையின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலையும் வலிமை மிக்க நுகர்வு ஆற்றலையும் உலகிற்கு கண்டறியச் செய்துள்ளதோடு, திறப்பை இடைவிடாமல் விரிவாக்கி, பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் தாராள வர்த்தகத்தை உறுதியாக ஆதரிக்கும் சீனாவின் மனவுறுதியையும் செயலையும் எடுத்துக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்