வரவேற்பு விருந்தில் ஷிச்சின்பிங்கின் உரை

இலக்கியா 2018-06-09 20:39:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வரவேற்பு விருந்தில் ஷிச்சின்பிங்கின் உரை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் வரவேற்பு விருந்து 9ஆம் நாளிரவு ட்சிங் தாவ் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இம்மாநாட்டில் கலந்து கொள்கின்ற அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கும் வரவேற்பைத் தெரிவித்தார்.

வரவேற்பு விருந்தில் ஷிச்சின்பிங்கின் உரை

ஷிச்சின்பிங் கூறுகையில், ட்சிங் தாவை உள்ளடக்கிய ஷன் டொங் மாநிலத்தில் தான் கன்ஃபூசியனிசம் உருவானது. ஒற்றுமையுடன் வளர்ச்சி பெறுவது, கன்ஃபூசியனிசத்தின் முக்கிய சிந்தனையாகும். இந்சிந்தனை, ஷாங்காய் எழுச்சியுடன் நன்கு பொருந்துகிறது. ஷாங்காய் எழுச்சியின் தலைமையில், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனிதப் பண்பாட்டுத் துறைகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, அதிகமான சாதனைகளைப் படைத்து, அமைப்பு முறை வளர்ச்சியில் புதிய காலடி எடுத்து வைத்துள்ளது. பிரதேச வளர்ச்சியின் பேணிக்காப்பு, கூட்டு வளர்ச்சி முன்னேற்றம், உலக நிர்வாக முறைமையின் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கிய சக்தியாக இவ்வமைப்பு திகழ்கிறது. புதிய உறுப்பு நாடுகள் இணைந்த பின், நடைபெறும் முதலாவது உச்சிமாநாட்டில், எதிர்கால இலக்குகளை விவாதித்து வரையறுப்போம் என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்