புதிய யுகத்துக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி

மதியழகன் 2018-05-28 15:55:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய யுகத்துக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ஜுன் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் சீனாவின் கடலோர நகரான ட்சிங்தாவில் நடைபெறவுள்ளது.  சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி, தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தது.

ட்சிங்தாவ் உச்சி மாநாட்டில், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குதல், வளர்ச்சித் திட்டங்களின் இணைப்பை வலுப்படுத்துதல், பயனுள்ள ஒத்துழைப்பை முன்னெடுத்தல் ஆகிய அம்சங்கள் பற்றி பல்வேறு தரப்புகள் விவாதிக்கும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு விரிவான மற்றும் தெளிவான திட்டங்களை வரையறுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தார்.

புதிய யுகத்துக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி

அவர் மேலும் கூறியதாவது

ட்சிங்தாவ் உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விரிவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது உச்சி மாநாடாகும். அது, 2018ஆம் ஆண்டில் சீனாவிலேயே நடைபெறும் மற்றொரு பெரிய தூதாண்மை நிகழ்வாகவும் திகழ்கிறது. இம்மாநாட்டின் போது, 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர் நாடுகளின் தலைவர்களும் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் ட்சிங்தாவில் ஒன்று கூடி, ஒத்துழைப்பு விவகாரங்களை ஆய்வு செய்ய உள்ளனர். அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அடுத்தடுத்து, சிறிய மற்றும் பெரிய அளவிலான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்குகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சி, புதிய சூழ்நிலையில் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் ஆகியவை பற்றி பல்வேறு தரப்புகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஒத்த கருத்துக்களைக் குவித்து, நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். இதன் மூலம், புதிய வரலாற்றுச் சூழ்நிலையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்றுவதிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை முன்னேற்றிச் செல்லும் என்று தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்ற பிறகு, பல்வறு உறுப்பு நாடுகளுக்கிடையேயான அரசியல் நம்பிக்கை, பயனுள்ள ஒத்துழைப்பு, மனித மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றை முன்னேற்ற சீனா  முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சி,  ட்சிங்தாவ் உச்சி மாநாடு நடத்துவதற்கு உறுதியான அடிப்படையை அளித்துள்ளது.

உறுப்பு நாடுகளின் ஒற்றுமையை மேம்படுத்தி, புதிய பொது கருத்துக்களை எட்டும் வகையில்,  ‘ட்சிங்தாவ் அறிக்கை’வெளியிடப்படும் என்று வாங் யீ குறிப்பிட்டார்.

தற்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ட்சிங்தாவ் உச்சி மாநாடு, புதிய யுகத்துக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியை ஊட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்