எஸ்சிஓ நேரம் துவங்கியது

பூங்கோதை 2018-06-07 11:40:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் சூரன்பேய் ஜீன்பெகெவுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூன் 6ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் முதலாவது விருந்தினராக சூரன்பேய் பெய்ஜிங்கை வந்தடைந்தார். இதுகாரணமாக, இவ்வாண்டுக்குள் சீனாவில் நடத்தப்படும் 2வது தூதாண்மை நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.

எஸ்சிஓ நேரம் துவங்கியது

வரவேற்பு விழா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டுக்குப்பிறகு, வரவேற்பு விழா புதிய முறையில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை. புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்புடைய தூதாண்மையின் புதிய நிலைமையை இது வெளிப்படுத்துகிறது.

எஸ்சிஓ நேரம் துவங்கியது

2018ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் நடத்தப்பட்ட உடன்படிக்கையைக் கையொப்பமாகும் நிகழ்ச்சியில் சீன-கிர்கிஸ்தான் அரசுத் தலைவர்கள் பங்கெடுப்பு

பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்கும் கூட்டறிக்கையில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கூட்டாக கையொப்பமிட்டனர். இரு நாட்டு உறவின் வரலாற்றால் மைல் கல் தன்மை வாய்ந்த ஒரு விஷயமாக, சீன-கிர்கிஸ்தான் உறவின் வளர்ச்சிக்கு இது புதிய இயக்காற்றலை ஊட்டியுள்ளது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

எஸ்சிஓ நேரம் துவங்கியது

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைச் சேர்ந்த ஒரு பகுதியாக, சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் சர்வதேச நெடுஞ்சாலை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, நிதி மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளுக்கு இது புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

எஸ்சிஓ நேரம் துவங்கியது

2013ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்றது. இவ்வமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கலந்து கொண்டது இதுவே முதன்முறை.

இவ்வாண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு மீண்டும் சீனாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஷி ச்சின்பிங் பேசுகையில், கிர்கிஸ்தானுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார். ட்சிங் தாவ் உச்சி மாநாட்டுக்குப்பிறகு, கிர்கிஸ்தான் இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடாக விளங்கும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்