ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நண்பர்களின் வருகை

மதியழகன் 2018-06-04 16:51:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நண்பர்களின் வருகை

துவக்க கட்டத்தில், 6 நாடுகளால் மட்டும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது வரை,  இதில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை, 18ஆக விரிவாகியுள்ளது.ஆரம்ப கட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சுமார் 150 கோடி மக்கள் தொகை இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 300 கோடியாக அதிகரித்துள்ளது.  மிக அதிக மக்கள் தொகையையும் மிகப்  பெரிய நிலப்பரப்பையும் கொண்ட பிராந்திய பன்னாட்டு அமைப்பாக இது மாறியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நண்பர்களின் வருகை

கடந்த சில ஆண்டுகளாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சியை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஊக்கமுடன் முன்னேற்றி வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு முன், “பட்டுப் பாதைக்கான பொருளாதார மண்டலம்”என்ற முன்மொழிவை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். இது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு புதிய இயக்காற்றலை ஊட்டியது.

5 ஆண்டுகளாக, ஷிச்சின்பிங் இவ்வமைப்பின் பல்வேறு உறுப்பு நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த  உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் ஷிச்சின்பிங்கிற்கும் இடையே“சகோதரர்”“நல்ல அண்டை வீட்டுக்காரர்”“பழைய நண்பர்” போன்ற உறவு காணப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் புதிய ரக சர்வதேச உறவை உருவாக்கும் மாதிரியாக, இத்தகைய நல்லுறவு விளங்குகிறது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங்தாவ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மீண்டும் உணர்ந்து கொள்வோம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்