​ஷிச்சின்பிங்: ஷாங்காய் குறிக்கோளை நிறைவேற்றி, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவோம்

மதியழகன் 2018-06-10 15:47:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்: ஷாங்காய் குறிக்கோளை நிறைவேற்றி, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவோம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18ஆவது உச்சி மாநாட்டின் பெரிய அளவிலான பேச்சுவார்த்தை ஜன் 10ஆம் நாள் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.  ஷாங்காய் குறிக்கோளை நிறைவேற்றி, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலிமைமிக்க உயிராற்றல் மற்றும் வலுவான ஒத்துழைப்பு உந்து சக்தியுடன் வளர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம்: பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், கலந்தாய்வு, நாகரிகங்களின் பன்மைத் தன்மையை மதித்தல், கூட்டு வளர்ச்சியை நாடுதல் உள்ளடங்கிய“ஷாங்காய் குறிக்கோள்”ஆகும்.

நாகரிகங்களிடை மோதல், பனிப் போர் உள்ளிட்ட பழைய கருத்துக்களைக் கடந்துச் சென்று, “ஷாங்காய் குறிக்கோள்”சர்வதேச உறவில் புதிய பக்கத்தைத் திறந்து வைத்துள்ளது

உலக நிலைமையையும் கால ஓட்டத்தையும் சரியாக அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். பூவி என்ற கிராமத்தில் பல்வேறு நாடுகளின் நலன் நாளுக்கு நாள் நெருங்கி, ஒன்றிணைந்து வருகிறது. மேலும், ஒத்துழைப்பு மூலம் கூட்டு வளர்ச்சியடையும் போக்கு நிலவுகிறது. வேறுபட்ட நாகரிகங்களிடையேயான பரிமாற்றம் பல்வேறு நாட்டு மக்களின் பொது விருப்பமாக இருக்கிறது

புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, தூய்மை, திறப்பு, பகிர்வு ரீதியிலான வளர்ச்சிக் கோட்பாடு,  பொதுமை, பன்னோக்கம், ஒத்துழைப்பு, தொடர்ச்சி ரீதியிலான பாதுகாப்புக் கோட்பாடு, திறப்பு, இணைப்பு, பரஸ்பர நன்மை, கூட்டுவெற்றி ரீதியிலான ஒத்துழைப்புக் கோட்பாடு, சமத்துவம், மேற்கோள், உரையாடல், உள்ளடக்குதல் ரீதியிலான நாகரிகக் கோட்பாடு,  கூட்டுக் கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம், கூட்டுப் பகிர்வு ரீதியிலான உலக நிர்வாகக் கோட்பாடு  ஆகியவற்றை எஸ்சிஓ கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

“ஷாங்காய் குறிக்கோள்”, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு செல்வமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உறுப்பு நாடுகளின் கூட்டுத் தாயகமாகும். மேலும், இந்தக் குறிக்கோளின் வழிகாட்டுதலில், இவ்வமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் மனம் ஒருமித்து, ஒத்துழைப்பு மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான பொது எதிர்காலச் சமூகத்தையும், புதிய சர்வதேச உறவையும் கூட்டாக உருவாக்கி, அமைதியான பாதுகாப்பான மற்றும் செழுமையான உலகத்தை நோக்கி கூட்டாக காலடி எடுத்து வைக்க வேண்டும்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் வகையில், அடுத்த 3 ஆண்டுகளில் சீனா, இவ்வமைப்பின் உறப்பு நாடுகளைச் சேர்ந்த 2000  சட்ட அலமாக்கப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும். ட்சிங்தாவ் நகரில் சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ளூர் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு முன்மாதிரி மண்டலத்தை கட்டியமைப்பதற்கு ஆதரவு அளிக்கப்படும். சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சட்ட சேவை கமிட்டி நிறுவப்படும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வங்கி கூட்டமைப்புக் கட்டுகோட்புக்குள் 3000 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்புக் கடன் திட்டப்பணி உருவாக்கப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்