சீன-இந்திய தலைவர்களின் 2ஆவது சந்திப்பில் சாதனைகள் அதிகம்!

2019-10-13 09:57:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் அக்டோபர் 11, 12 ஆகிய நாட்களில் சென்னையில் 2ஆவது முறை சாரா சந்திப்பு நடத்தினர்.

சந்திப்பிற்கு பிறகு சீன வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் லுவொ ட்சாவ்ஹுய் இந்த சந்திப்பு தொடர்பான சாதனைகளை செய்தி ஊடகங்களுக்கு விளக்கி கூறினார்.

அவர் கூறியதாவது:

இரு நாட்டுத் தலைவர்களும் நட்பார்ந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த மற்றும் நீண்டகால விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, இரு நாடுகளுக்கிடையே வளர்ச்சி ரீதியான கூட்டுறவை மேலும் நெருக்கமாக வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர் என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகால வர்த்தகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், ஃபூஜியன் மாநிலத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையேயான நட்பு மாநிலங்களின் உறவை உருவாக்க ஒப்புதல் அளித்தனர். மேலும், இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த, உயர் நிலை பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை முறைமையை நிறுவ இரு நாட்டு தலைவர்கள் முடிவெடுத்தனர் என்று லுவொ ட்சாவ்ஹுய் குறிப்பிட்டார்.

முறை சாரா சந்திப்பு என்ற இந்த விதத்தை, ஷி ச்சின்பிங்கும் நரேந்திர மோடியும் ஆக்கப்பூர்வமாக பாராட்டினர். எதிர்காலத்தில், முறைசாரா சந்திப்பு உள்ளிட்ட விதங்களில் தொடர்பு மேற்கொள்ள இரு தரப்பினர் தொடர்ந்து செயல்படுவதாக, லுவொ ட்சாவ்ஹுய் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்