இந்திய-சீனத் தலைவர்கள் சந்திப்புக்கு இந்திய பல்வேறு துறைகளின் பாராட்டுகள்

வான்மதி 2019-10-13 15:21:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2 நாட்கள் நடைபெற்ற சீன-இந்திய தலைவர்களின் 2ஆவது முறைசாரா சந்திப்பு 12ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவுற்றது. இச்சந்திப்பு மீது பெரும் கவனம் செலுத்திய இந்திய பல்வேறு துறையினர்கள் வெகுவாகப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதோடு, இருநாட்டுறவு சீரான நிலையான வளர்ச்சியைக் காண வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.

புதுச்சேரி இந்திய-சீன நட்புச் சங்கத்தின் நிறுவனரும் தலைமைச் செயலாளருமான தாஸ் பிகாஷ்காளி நடப்பு சந்திப்பு பற்றிய இந்திய ஊடகங்கள் வழங்கிய நேரலையை முழுமையாகக் கண்டு ரசித்து, உணர்ச்சிவசப்பட்டதோடு பெருமையும் அடைந்தார். அவர் கூறுகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு அரசு சாரா அமைப்புகளுக்கிடையே இருநாடுகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகள் பெரும் வளர்ச்சி அடைய வேண்டும் என விரும்புகின்றேன். ஏனென்றால், அரசு சாரா அமைப்புகள் இருநாட்டுறவின் எதிர்கால வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்