இந்தியா மற்றும் நேபாளத்தில் ஷிச்சின்பிங் வெற்றிப் பயணம்!

ஜெயா 2019-10-13 19:48:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 11ஆம் நாள் துவங்கி தெற்காசியாவின் 2 நாடுகளில் மேற்கொண்ட பயணம் 13ஆம் நாள் வெற்றிகரமாக முடிந்து விட்டது.

இந்தியாவும் நேபாளமும் தெற்காசியாவில் சீனாவின் 2 முக்கிய அண்டை நாடுகளாகும். 2020ஆம் ஆண்டு, சீன-இந்தியத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவும், சீன-நேபாளத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவும் ஆகும். இதையொட்டி இரு நாடுகளுக்கும் ஷிச்சின்பிங் மேற்கொண்ட வெற்றிகரமான பயணம், ஒன்றின் மீதான மற்றதன் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பையும் ஆழமாக்கியுள்ளது.

இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டுத் தலைவர்கள் பரிமாற்றத்தை ஆழமாக்கி, கருத்து வேற்றுமையை உரிய முறையில் கையாண்டு, இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்தி, கூட்டாக வளர்த்துள்ளனர். தற்போது வர்த்தகப் பாதுகாப்புவாதம் தலைதூக்கும் நிலையில், பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளியுறவு உடன்படிக்கையை இரு நாடுகள் வெகுவிரைவில் எட்ட வேண்டும். இதன் மூலம், பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்துக்கு புதிய வளர்ச்சி ஆற்றல் ஏற்படும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நேபாளத்துக்கான ஷிச்சின்பிங்கின் அரசுமுறைப் பயணத்தின் மூலம், இரு நாட்டுறவு விரைவான வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பின்பு, சீன அரசுத் தலைவர் நேபாளத்தில் மீண்டும் பயணம் மேற்கொள்வது, இரு நாட்டுப் பல்வேறு துறைகளிலான பயனுள்ள ஒத்துழைப்புக்கு புதிய உந்து சக்தியை ஊட்டி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய திட்டத்தை வழங்கியுள்ளது.

ஷிச்சின்பிங்கின் இப்பயணம், பிரதேசம் மட்டுமல்லாமல் உலகின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சியையும் முன்னேற்றுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்