நவ சீனாவின் வைர விழா பற்றிய பொது அறிவுப் போட்டி

இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்படட 60வது ஆண்டு நிறைவாகும். கடந்த 60 ஆண்டுகளில், நாட்டின் கட்டுமானத்தில், சீன அரசு மக்களோடு, இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இதனால் சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றல், பெருமளவில் உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவர்கள் படிப்படியாக செல்வச் செழிப்பு பெற்று வருகின்றனர். தொழில்துறை, வேளாண்மை, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளில் பெரும் சாதனைகள் காணப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் நேயர்களும், இணைய தளத்தில் உலாவரும், நண்பர்களும் இந்த 60 ஆண்டுகளில் சீனா பெற்றுள்ள வளர்ச்சிகளையும். மாற்றங்களையும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் காணப்படட சாதனைகளையும் அறிந்து கொள்வதற்காக, ஜூன் திங்கள் முதல் நாள் தொடக்கம், வானொலி மற்றும் இணையதளத்தின் மூலம், சீன வானொலி நிலையம், நவ சீனாவின் வைர விழா பற்றிய பொது அறிவுப் போட்டியை நடத்தும். உங்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம்.

போட்டி காலம்: 2009ஆம் ஆண்டு ஜூன் 1 – செப்டெம்பர் 1
போட்டி விதிமுறைகள்:இணைய தளத்தில் விடையளித்தல், சீனாவுக்கு வாழ்த்துக்கள் ஆகிய இரண்டு பகுதிகள் இப்போட்டியில் இடம் பெறுகின்றன.
போட்டியில், 10 வினாக்கள் இடம் பெறுகின்றன. எல்லா வினாக்களுக்கும் சரியான விடையளித்து, சீனா பற்றிய கருத்துக்களை எழுதுகின்ற நேயர்களுக்குப் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசுகள்:
உலகெங்கிலுமிருந்து இப்போட்டியில் கலந்துகொள்ளும் நேயர்களிலிருந்து, சிறப்புப் பரிசுக்கென 10 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். சிறப்புப் பரிசு பெறும் இந்த 10 பேரும், இலவசமாக சீனாவில், சுற்று பயணம் மேற்கொள்ள அழைக்கப்படுவர்.
முதலாவது பரிசு: சீன தனிச்சிறப்பு வாய்ந்த பட்டு நூல் ஓவியம்
இரண்டாவது பரிசு: சீன தனிச்சிறப்பு வாய்ந்த பட்டுச் சால்வை அல்லது சீன பாணியில் அலங்கரிக்கப்படட பட்டுத்துணி
மூன்றாவது பரிசு: T-shirt
பரிசு பெற்றவர்களின் பெயர் பட்டியல் சீன வானொலி இணையதளத்தில் வெளியிடப்படும்.Play
©China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040