中国国际广播电台
உலகில் மிக
அதிக வன விலங்கு வகைகளைக் கொண்ட
நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.
இந்நாட்டில் சுமார் 6266 வகை
முதுகெலும்பு கொண்ட விலங்குகள்
உண்டு. இவற்றில் 500 வகை மிருக
வகையைச் சேர்ந்தவை. 1258 வகைகள்
பறவை வகைகளைச் சேர்ந்தவை. 376
வகைகள் ஊர்ந்து செல்லும் விலங்கு
வகைகளைச் சேர்ந்தவை. 284 வகைகள்
நீரிலும் நிலத்திலும் வாழும்
விலங்குகள். 3862 வகைகள் மீன்கள்.
உலகில் முதுகெலும்பு கொண்ட
விலங்கு வகைகளில் 10ல் ஒன்றாகும்.
முதுகெலும்பு இல்லாத விலங்குகள்
50 ஆயிரம் வகைகளுக்கு அதிகமாகும்.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் வகை புழு
பூச்சிக்களும் சீனாவில் உண்டு.
சீனாவின்
பெரும் பகுதி பிரதேசஹ்கள் 3வது
4வது நூற்றாண்டுகளின் பெரிய
நிலப் பகுதி பனிக்கட்டியாறுகளால்
பாதிக்கப்படாத காரணத்தால்
பெருவாரியான சிறப்பு விலங்கு
வகைகள் இங்கு உண்டு.
புள்ளிவிபரங்களின் படி 476 வகை
நிலம் வாழ் முதுகெலும்
விலங்குகள் சீனாவுக்கே உரியவை.
இவை சீனாவின் நிலம் வாழ்
முதுகெலும்பு விலங்கு வகைகளில்
19.42 விழுக்காடாகும். ராட்சத
பாண்டா, பொன் ரோமக் குரங்கு,
தென் சீனப் புலி, செந்நிறக்
கொண்டையுடைய நாரை, குறுப்பு
மற்றும் வெள்ளை டால்பிஃன்,
யாங்சி முதலை உள்ளிட்ட 100 வகை
அரிய வன விலங்குகள் உலகில் பெயர்
பெற்ரவை. கறுப்பு வெள்ளை
நிறமுடைய ரோமம் கொண்ட ராட்சத
பண்டாவின் எடை 135
கிலோகிராமாகும். அது இளம்
மூங்கிலையும் மூங்கில்
முளையையும் தின்று வாழ்கின்றது.
தற்போது ஏறக்குறைய ஆயிரம்
பாட்சத பண்டாக்கள் சீனாவில்
வாழ்கின்றன. உலக வன விலங்குப்
பாதுகாப்புச் சின்னமாக அது
விளங்குகின்றது. செந்நிறக்
கொண்டையுடைய நாரையானது 1.2
மீட்டர் நீளமுடைய உடலைக்
கொண்டிருக்கின்றது.
கிழக்காசியாவில் நீண்ட நெடிய
வாழ்வின் சின்னமாக அது
கருதப்படுகின்றது. வெள்ளை
டால்பினானது உலகில் இரண்டு
நன்னீர் திநிங்கல வகைகளில்
ஒன்றாகும். 1980ல் முதன்முறையாக
யாங்கி ஆற்றில் பிடிக்கப்பட்ட
முதலாவது ஆண் வெள்ளை டால்பின்
உலக டால்பின் ஆய்வுத் துறையில்
பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சீனாவின்
வடகிழக்கு, வடக்கு,
உள்மங்கோலி-சிஹ்சியாங்,
சிங்காய்-திபெத், தென்மேற்கு,
நடுப் பகுதி, தெந் பகுதி ஆகிய 7
பிரதேசஹ்களில் விலங்குகள்
பரந்து கிடக்கின்றன. வெவ்வேறான
புவிவியல் நிலைக் கேற்ப
வெவ்வேறான வகை விலங்குகள்
வாழ்கின்றன.
|