சின்ச்சியாங் பற்றி

中国国际广播电台

சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் வடமேற்கு சீனாவில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 16 இலட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவில் மிக பெரிய நிலப்பரப்பு உள்ள மாநிலம் இதுவாகும். சின்ச்சியாங்கின் மேற்கு பகுதியும், வடக்கு பகுதியும், மங்கோலியா, ரஷியா, கஜாகிஸ்தான், கிர்கிஸ்ஸ்தான், தாஜிக்ஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய 8 நாடுகளுடன் ஒட்டியமைந்துள்ளன. எல்லை நீளம் 5400 கிலோமீட்டராகும். சீனாவில் மிக நீளமான எல்லை, மிக அதிகமான வெளிநாட்டு நுழைவாயில்கள் ஆகியவற்றைக்கொண்ட பிரதேசம் சின்ச்சியாங் ஆகும்.