புவியியல் சூழ்நிலை

中国国际广播电台

ஆசியாவின் மையத்தில் சின்ச்சியாங் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கிற்கு, முறையே ஆல்தை மலை, தியேன் சான் மலை, குன்லுன் மலை உள்ளன. மலைகளிடையில் சுன்க்கர் வடிநிலமும், தலிமு வடிநிலமும் இடம்பெறுகின்றன. வழக்கமாக, தியேன் சான் மலைக்குத் தெற்கு பகுதியை நான்ஜியாங் என்றும், வடக்கு பகுதியை பெய் ச்சியாங் என்றும், ஹாமி, துருபான் வடிநிலம் ஆகியவற்றை துன் ச்சியாங் என்றும் அழைக்கப்படுகின்றன. சின்ச்சியாங்கின் நகரங்களும் கிராமப்புறங்களும் பாலைவனத்தில் அமைந்துள்ளன. இரண்டு பாலைவனஙங்களுக்கு நடுவில் பசுமையான இந்த நிலப்பரப்பு மரகதத்திட்டு போல் தென்படுகின்றது.

சீனாவில் மிக பெரிய நிலத்தை சூழ்ந்த தலிமு ஆறு, மிக பெரிய நன்னீர் ஏரியான போஸ்தன் ஏரி, கடல் மட்டத்திலிருந்து மிகவும் தாழ்வான துருபான் வடிநிலம் ஆகியவை சிச்சியாங்கில் அமைந்துள்ளன. இது வறட்சி பிரதேசமாகும். குளிர்காலத்துக்கும் கோடைகாலத்துக்குமிடையில் காலநிலை வேறுபாடு மிகவும் தெளிவாகத் தெரியும். அலாதை பிரதேசத்தில் சீனாவில் மிகவும் குறைவான காலநிலை பதிவாகியுள்ளது. துருபான் பிரதேசத்தில் நீண்டகாலமாக சீனாவில் மிக அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சீனாவில் பாலை நிலப்பரப்பில் மூன்றில் 2 பகுதி சின்ச்சியாங்கில் உள்ளது. சீனாவின் மிக பெரிய தக்லாமாகான் பாலைவனத்தின் நிலப்பரப்பு 3 இலட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இது உலகில் 2வது பெரிய நடமாடும் பாலைவனமும் ஆகும். சுன்கர் வடிநிலத்தில் அமைந்துள்ள குர்பான்துன்குத் பாலைவனத்தின் நிலபரப்பு 48 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இது சீனாவில் 2வது பெரிய பாலைவனமாகும். இந்த பாலைவனங்களில் எண்ணெய், இயற்கை வாயு, கனிம வளம் ஆகியவை புதைந்து கிடக்கின்றன.

சின்ச்சியாங்கில் அதிக பனி மலைகள் இருக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்புமிக்க இறைபனியால் இயற்கை நீர்தொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. சின்ச்சியாங்கில் தனிநபர் நீர் வளம் முன்னணியில் இருக்கின்றது.

(கானாஸின் இலையுதிர்காலம்)