சின்ச்சியாங்கின் வரலாறு

中国国际广播电

2000 ஆண்டுகளுக்கு முன், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றிணைந்த சீனாவின் ஒரு பகுதியாக சின்ச்சியாங் இருந்து வருகின்றது. கி.மு.60ஆம் ஆண்டு, ஹான் வம்சத்தில், மேற்கு பிரதேசத்து தூஹு எனும் உள்ளூர் அரசு உருவாக்கப்பட்டது. அப்போதைய மேற்கு ஹான் அரசு சின்ச்சியாங்கை நேரடியாக ஆட்சி புரிந்தது. பால்கஷ் ஏரி, பாமீர் பிரதேசம் ஆகியவை அப்போதைய சின் ச்சியாங்கில் இடம்பெற்றது. இதற்குப் பிந்திய சுமார் 1000 ஆண்டுகளில், சின் ச்சியாங் பிரதேசம் சீன நடுவண் அரசின் ஆட்சியில் இருந்து வருகின்றது. நடுவண் அரசு சின்ச்சியாங் விவகாரங்களைக் கையாளும் நிர்வாக நிறுவனங்களை அமைத்து வருகின்றது.

300 ஆண்டுகளுக்கு முந்திய சின் வம்சத்தில், சின் ச்சியாங் இலி ஹுய் யுவான் நகரில் முழு பிரதேசத்தை ஆளும் இலி தளபதியை நியமித்தது. 1884ஆம் ஆண்டு, சின்ச்சியாங் ஒரு மாநிலமாக மாறியுள்ளது. வேறு மாநிலங்களுடனான தொடர்பும் நெருக்கமாகியுள்ளது.

1949ஆம் ஆண்டு செப்டெம்பர் சின் ச்சியாங் அமைதியாக விடுதலை பெற்றது. வேறு மாநிலங்களைப் போல், சின் ச்சியாங் சீனாவில் தேசிய இன தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.