மூலவள தளம்

中国国际广播电台

சின்ச்சியாங்கில் செழிப்பான மூலவளங்கள் உள்ளன. சின்ச்சியாங்கில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கரி மற்றும் எண்ணெயின் அளவு சீனாவில் மொத்த அளவில் மூன்றில் ஒரு பகுதியாகும். இயற்கை வாயுவின் அளவும் அதிகமானது. வடமேற்கு சீனாவில் மிக பெரிய எண்ணெய் நிலமாகவும், ஒளிமயமான எதிர்காலமுடைய மிக பரந்த எண்ணெய் தளமாகவும் இது திகழ்கின்றது. 7 இலட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலபரப்புடைய சின்ச்சியாங் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வயலில், 2080 கோடி டன் எண்ணெயும் 10 இலட்சம் கோடி கனமீட்டர் இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவில் மொத்த எண்ணெய் மற்றும் இயற்கை மூலவளத்தில் 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. சீன எண்ணெய் தொழிலின் விருப்ப கடல் என்று சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இதனை அழைக்கின்றனர். 2004ஆம் ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட மேற்கில் இருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்பும் திட்டப்பணி, சின்ச்சியாங்கின் செழிப்பான இயற்கை வாயுவை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்காய் மாநகரத்துக்கும் இதற்கு அருகிலுள்ள பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ளது.

சின்ச்சியாங்கில் நிலக்கரியின் மொத்த அளவு சுமார் 20 ஆயிரம் டன்னாகும். நாட்டின் மொத்த நிலக்கரி அளவில் இது சுமார் 40 விழுக்காடாகும். சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. தாபென்சுன் காற்று ஆற்றல் மின் உற்பத்தி ஆலை, சீனாவில் மிக பெரிய காற்று ஆற்றலால் மின் உற்பத்தி ஆலையாகும்.


(தலிமு எண்ணெய் தளம்)