சின்ச்சியாங்கின் வேளாண் துறை

中国国际广播电台

அதிக சூரிய ஒளியும் நில வளமும் சின்ச்சியாங்கில் இருக்கின்றன. சிறந்த நீர் வளம் கொண்ட இடத்தில் உள்ளூர் மக்கள் புகழ்பெற்ற பாலைவன வேளாண்முறையை கண்டுபிடித்துள்ளனர். கோதுமை, மக்காச்சோளம், நெல் ஆகியவை அங்கு விளையும் முக்கிய வேளாண் உற்பத்தி பொருட்களாகும். பருத்தி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, hops ஆகியவை முக்கியமான பணப் பயிர்களாகும். இவற்றில், சின்ச்சியாங்கின் பருத்தி உற்பத்தி சீனாவில் முக்கிய இடம் வகிக்கின்றது. சீனாவில் மிக பெரிய நீள் இழைப் பருத்தி உற்பத்தி தளம் இதுவாகும். இதன் உற்பத்தி அளவு சீனாவில் மொத்த நீள் இழைப் பருத்தியின் உற்பத்தி அளவில் 95 விழுக்காடாகும். இதன் தரம் உலகப் புகழ்பெற்ற எகிப்து நீள் இழைப் பருத்தி போல் இருக்கின்றது.

பழங்களின் ஊர் என்ற பெருமையையும் சின்ச்சியாங் பெற்றுள்ளது. சீனாவில் மிக பெரிய நிலபரப்பில், பல்வகையான உயர் தர பழங்கள் விளையும் பிரதேசமாகும். முந்திரிப்பழம், ஹாமி பழம், முலாம்பழம், ஆப்பிள், பேரிக்காய், வாதுமை, அதன்களி, கொய்யாபழம், cherry முதலியவை விளைகின்றன. பெப்ப மண்டலப் பழங்கள் எல்லாம் இங்கே காணப்படலாம். இவற்றில், துருபானின் திராட்சைப்பழம், ஹாமி பழம் ஆகியவை தனிப்பட்ட சுவையுடையன. மிகவும் இனிப்பானது. மிகவும் இனிப்பானது.

கடந்த சில ஆண்டுகளில், சின்ச்சியாங்கின் வேளாண் துறை மேன்மேலும் தொழில் மயமாகி வருகின்றது. தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், குங்கமப்பூ, மிளகாய், திராட்சைப்பழம், வண்ண பருத்தி ஆகியவற்றை கொண்ட குறிப்பிட்ட அளவுடைய சங்கிலித் தொடர்பு தொழில் நிறுவனங்கள் பூர்வாங்க ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

(வெவூர் இன விவசாயிகள்)