சின்ச்சியாங்கின் கால்நடை வளர்ப்புத் தொழில்

中国国际广播电台

சின்ச்சியாங்கில் பல்வகை கால்நடைகள் உள்ளன. சீனாவின் முக்கிய கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களில் ஒன்றாகும். பண்டைகாலம் முதல், புகழ்பெற்ற குதிரை வளர்க்கும் பிரதேசம் இதுவாகும். செம்மறியாட்டை முக்கியமாகக் கொண்டு, குதிரை, மாடு, ஆடு, கழுதை, கோவேறுகழுதை, ஒட்டகம், கவரிமான் ஆகியவை வீட்டு வளர்ப்பு கால்நடைகளாகும். சின்ச்சியாங்கின் மாட்டிறைச்சியின் உற்பத்தி அளவு சீனாவில் 2ம் இடம் வகிக்கின்றது. மொத்த கால்நடை எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.

சின்ச்சியாங்கில் இயற்கை புல்வெளியின் மொத்த நிலபரப்பு 5 இலட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். வேளாண் மற்றும் காட்டு நிலபரப்பில் இது 87 விழுக்காடாகும். இயற்கை புல்வெளி சின்ச்சியாங் கால்நடை வளர்ப்புத் தொழிலை வளர்ச்சியறச்செய்யும் அடிப்படையான முக்கியமான உற்பத்தி மூலவளமாகும். முழு பிரதேசத்தின் 70 விழுக்காட்டு கால்நடை வளர்ப்பும் உற்பத்தி எண்ணிக்கையும் இங்கு உள்ளன.

புதிய கால்நடை வகை வளர்க்கும் தளமாக சின்ச்சியாங் திகழ்கின்றது. சின்ச்சியாங் நுண் மயிர் ஆடு, சீன மெலினு ஆடு, சின்ச்சியாங் ஊதாநிறம் மாடு, இலி குதிரை, இலி வெள்ளை பன்றி, சின்ச்சியாங் கறுப்பு பன்றி ஆகிய தனிச்சிறப்புடைய புதிய வகைகள் இருக்கின்றன. தனிச்சிறப்பான உயிரின தன்மையும் உயர்ந்த பொருளாதார மதிப்பும் இவற்றுக்கு உண்டு. சின்ச்சியாங்கின் மட்டுமல்ல சீனாவின் அரிய கால்நடை மூலவளம் மற்றும் முக்கிய மரபணுக் களந்சியமாக இவை திகழ்கின்றன.