கஸாக் இனம்

中国国际广播电

சின்ச்சியாங்கில் 12 இலட்சம் கஸாக் இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் முக்கியமாக வடக்கு சின்ச்சியாங்கின் இலி கஸாக் தன்னாட்சி வட்டாரத்தில் வாழ்கின்றனர். கஷாக் இனத்திற்கு சொந்த மொழியும் எழுத்துக்களும் உள்ளன.

கஸாக் இனத்தவர் பெரும்பாலோர் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். குறைவாக மக்கள் வேளாண் தொழிலில் ஈடுபட்டு குடியிருப்புக்களைக் கட்டியுள்ளனர். வேறு பலர் காலத்திற்கு ஏற்ப புல்வெளியின் மாற்றத்தைப் பின்பற்றி நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.

கஸாக் இனத்தவர் விருந்தோம்பலில் சிறந்து விளங்குகின்றானர். வீட்டில் மிக சிறந்த உணவுகளை விருந்தினர்களுக்கு படைத்து உபசரிக்கின்றனர். வீட்டில் வளர்க்கும் ஆட்டைக் கொன்று சமைக்கின்றனர். விருந்தில், ஆட்டுத் தலை இருக்கும் தட்டு விருந்தினருக்கு வைக்கப்படும். அப்போது, விருந்தினர் தட்டில் உள்ள ஆட்டினுடைய தாடையின் ஒரு பகுதியை வெட்டி உண்டு, ஆட்டின் காதை வெட்டி விருந்தளிப்போன் வீட்டில் உள்ள வயதில் மிக இளமையவருக்கு வழங்கிய பின், தட்டை விருந்தளிப்போனுக்குத் திருப்பி கொடுக்கின்றனர்.

கஸாக் இனத்தவர் ஆண்களோ பெண்களோ குதிரை சவாரி செய்வதில் தேர்ச்சி பெற்றவராவர், இளம் ஆண்களுக்கு மற்போர், தியோ யாங் ஆகிய விளையாட்டுகளை மிகவும் பிடிக்கும். விழா அல்லது கொண்டாட்டங்களின் போது, மக்கள் பல்வகை சவாரி நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர். கு நியாங் சுயே என்பது, ஆண்கள் ஓடி, மங்கையர் பின்பற்றி ஓடும் நிகழ்ச்சியாகும். இளைஞரைப் பொறுத்த வரை இது காதலிகளைத் தேடிக் கொள்ள நல்ல வாய்ப்பாகும்.

 

(கு நியாங் சுய நிகழ்ச்சி)