கிர்கிஸ் இனம்

中国国际广播电台


கிர்கிஸ் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரமாகும். இவ்வினத்துக்கு சொந்த இன மொழியும் எழுத்துக்களும் உண்டு.

இவ்வினத்தவர் முக்கியமாக மேற்கு சின்ச்சியாங்கின் பாமிர் பீடபூமியில் க்ஸ்லசூ கிர்கஸ் தன்னாட்சி வட்டாரத்தில் வாழ்கின்றனர். கால்நடைவளர்ப்பு இவர்களின் முக்கிய தொழிலாகும். வசந்த காலத்தில் அவர்கள் அடிக்கடி ஆற்றுக்கு அருகில் வசிக்கின்றனர். குளிர்காலத்தில் சூரிய ஒளி கிடைக்கக்கூடிய பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். குறிப்பிட்ட குடியிருப்பு பிரதேசம் கொண்ட கிர்கிஸ் இனத்தவர் தட்டையான கூரையுடைய சதுரமான மண் வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் பூசை அறை, சாளரம் ஆகியவை இருக்கின்றன. வீட்டுக்கு அருகில் காய்கறிகளும் பழங்களும் வளர்க்கப்படுகின்றன. நெய், பாலடைக்கட்டினால் தயாரிக்கப்பட்ட உணவு ஆகிய பல்வகை உணவுவகைகள் இருக்கின்றன.

கிர்கிஸ் இனத்தின் பாரம்பரிய ஆடைகள் அழகானது. ஆண்கள் Terai எனும் தொப்பியை அணிக்கின்றனர். பெண்கள் முன்புறம் வெள்ளை பொத்தான்கள் கொண்ட ஆடைகளை அணிய விரும்புகின்றனர். திருமணம் முடிக்காத கன்னிப் பெண்கள் பல வகைகளில் கூந்தலைப் பின்னுகின்றனர். திருமணத்துக்குப் பின் 2 சடை போடுகின்றனர்.