கானஸ் ஏரி

中国国际广播电台

கானஸ் ஏரி வடக்கு சின் ச்சியாங்கில் அல்தை மலை காடுகளில் அமைந்துள்ளது. பூர்சின் மாவட்ட நகரத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கானஸ் என்பது மங்கோலிய மொழியில் பள்ளத்தாக்கிலுள்ள ஏரி என்பதாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1374 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. ஏரி நீர் 188.5 மீட்டர் ஆழமாகும். நிலபரப்பு 45.73 சதுர கிலோமீட்டராகும்.

கானஸ் ஏரியின் அருகில் பனிமலைகள் இருக்கின்றன. கண்களுக்கு விருந்து அளிக்கும் காட்சி உடையது. சீனாவில் தென் சிபுலிய பிரதேச விலங்கு மற்றும் தாவரங்கள் பரவும் ஒரேயொரு இடமாகும். அங்கே larch, ren pine, spruce, fir ஆகிய அரிய மர வகைகளும், பல்வகை பூர்ச்சமரங்கள் இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மர வகைகள் சுமார் 800 ஆகும். மிருகங்களின் வகைகள் 39 ஆகும். பறவை வகை 117 ஆகும். மேலும் 4 வகை நீரிலும் தரையிலும் வசிக்கின்ற ஊர்ந்து செல்லும் விலங்குகளும், 7 மீன் வகைகளும், 300க்கும் அதிகமான பூச்சி வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பல வகைகள் சின்ச்சியாங்கில் ஏன் முழு சீனாவிலும் அரியவை. இப்பிரதேசத்தில் காடுகளும், புல்வெளியும் மாறிமாறி உள்ளன. ஆறு, ஏரி, ஆகியன அதிகமானவை. இயற்கை காட்சி மிகவும் அழகானது. சுற்றுலா, இயற்கை பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு, வரலாற்று பண்பாடு ஆகியவற்றுக்கு உயர்ந்த மதிப்பு கொண்டுள்ளது.

(கானஸ் ஏரி)