துருபான்
中国国际广播电台

சின்ச்சியாங்கின் நடுவில் உள்ள வடிநிலப்பகுதியில், தீ இடம் என்னும் பிரதேசம் இடம்பெறுகின்றது. இங்குள்ள பு தௌ கு எனும் இடத்தில் பல்வகை தரமுடைய திராட்சைப் பழங்கள் விளைகின்றன. இது தான், துருபான். தனிப்பட்ட புவியியல் அமைப்பு காரணமாக துருபானின் நிலத்தடி நீர் வளம் அதிகம். ஆகையால், திராட்சைப்பழம், தர்ழசணிவகைப்பழங்கள் உள்ளிட்ட பல்வகை பழங்கள் விளைகின்றன. மழை குறைந்த காலநிலை ஈரனின்றி இருப்பதால் ஆகியவற்றினால் பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கின்றன. பல பயணிகள் துருபான் வந்து பழவகைகளை ருசிக்கின்றனர்.

துருபான் திராட்சை பழத்தின் இராஜ்யமாகும். நகரமும், மனிதரும் திராட்சை பழத்தின் சூழ்நிலையிலேயே இருக்கின்றனர். இங்கே எங்கெங்கும் காணப்படும் திராட்சை பழம் பற்றி பயணிகள் ஆவலுடன் பேசுகின்றனர். வரலாற்று நூலின் படி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தான், மக்கள் இங்கே திராட்சை பழங்களை பயிரிடத் துவங்கினர்.

துருபான் நகரத்தில், பல பழைய திராட்சை பழ தோட்டங்கள் உள்ளன. பாதைகளிலும் வீட்டுக்கு முன்னரும் பின்னரும் திராட்சை கொடிகள் காணப்படலாம். இங்குள்ள மக்கள் சிறப்பு வடிவம் மூலம் திராட்சைப் பழங்களை உலர வைக்கின்றனர். துருபானில், யின் பான் எனப்படும்ம் மண்ணினால் கட்டப்பட்ட 4 பக்கங்களிலும் காற்று நுழைய கூடிய வீடுகள் பல உண்டு. வெப்பக் காற்று மூலம், இயற்கையாக உலர்ந்த திராட்சைப்பழம், பச்சை நிறமும், சுவையும் உடையது. மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

திராட்சை பாதை ஒன்றை உள்ளூர் அரசு சிறப்பாக கட்டியமைத்தது. பல திராட்சை தாழ்வாரம், திராட்சை பூங்கா, திராட்சை பொருட்காட்சி நிலையம் நகரத்தில் உள்ளன. தற்போது, துருபானுக்கு வந்த பயணிகள், பு தௌ குவில், இங்குள்ள அழகான காட்சியைக் கண்டுகளித்த பின், பல்வகை புதிய திராட்சை பழங்களை தாங்களே பறித்து ருசிக்கலாம்.


(துருபானில் விவூர் இன குடும்பம்)