ஹோ தியேன்
中国国际广播电台

ஹோ தியேனின் பழைய பெயர் யு தியேன் என்பதாகும். மேற்கு பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற பண்டை நகரம் இதுவாகும். ஆசிய ஐரோப்பிய மண்டலத்தின் நடுப்பகுதியிலும், தெற்கு பட்டு பாதையின் முக்கிய பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. பல்வேறு தேசிய இனங்கள் இங்கே வசிக்கின்றன. கீழை நாகரிகமும் மேலை நாகரிகமும் இங்கே ஒன்றிணைந்து காணப்படுகின்றன. வரலாற்றில் பல்வேறு நாடுகளின் தூதர்களும் வணிகர்களும் இங்கே வருகை தந்துள்ளனர்.

ஹோ தியேனின் வடக்கில் தக்லாமாகான் பாலைவனம் அமைந்துள்ளது. குன் ருன் மலை இதற்கு தெற்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அற்புதமான பனி மலையும் பாலைவனமும், ஏரியும் புல்வெளியும், வளமிக்க வயல்களும் இங்கே காணலாம். ஹோ தியேனின் கூழாங்கல், பட்டு துணி, கம்பளம், பழ வகைகள் மிகவும் புகழுடையன. கூழாங்கல் நகர், பட்டு நகர், பழ வகைகளின் ஊர் ஆகியவை என இது புகழ் பெற்றது.

(ஹோ தியேனில் ஒரு சந்தை)