பல்வேறு மதங்கள் இடம்பெறும் பிரதேசம்
中国国际广播电台

வரலாற்றில் புத்தர் மதம், சிங் மதம், மோனி மதம், இஸ்லாமிய மதம் ஆகியவை அடுத்தடுத்து சின்ச்சியாங்கில் பரவி வந்துள்ளன. உலகிலேயே 4 பெரிய மதங்கள் இடம்பெறும் ஒரேயொரு பிரதேசமாக சின்ச்சியாங் திகழ்கின்றது.

கி.பி 100ஆம் ஆண்டுகளில், புத்தர் மதம் பட்டு பாதை வழியாக கிழக்கு நோக்கி பரவி, சீனாவின் நடு பகுதிக்குள் நுழைந்தது. சிங் மதம் கிறிஸ்த்துவ மதத்தின் ஒரு கிளையாகும். கி.பி. 600ஆம் ஆண்டுகளில் சின்ச்சியாங்க்குள் நுழைந்தது. பண்டைக்காலத்தில், இந்த மதம் சின்ச்சியாங்கில் பரவி, சின்ச்சியாங்கை இதன் ஒரு மையமாக மாற்றியுள்ளது என்று ஆய்வு காட்டுகின்றது. பின்னர், இஸ்லாமிய மதம் சின்ச்சியாங்கிற்கு நுழைந்தது. சிங் மதம் படிப்படியாக மறைந்தது. கி.பி. 694ஆம் ஆண்டில் மோனி மதம் சீனாவில் பரவியது. 19வது நூற்றாண்டு முதல், துன்குவான் மொகௌ கு கற்குகை, சின்ச்சியாங் துருபான் ஆகியவற்றில் பெரும் தொகையான மோனி மத நூல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. வடமேற்கு சீனாவில் மோனி மதம் பரவலாக பரவி ஆழ்ந்த செல்வாக்கு பெற்றது என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது. கி.பி.1000ஆம் ஆண்டுகளின் நடுவில், இஸ்லாமிய மதம் பட்டு பாதை மூலம் காஷ்க்குள் நுழைந்தது. 16வது நூற்றாண்டு முதல் 17வது நூற்றாண்டு வரை, இது முழு சின்ச்சியாங்கிலும் பரவலாகியுள்ளது. தற்போது, சின்ச்சியாங்கில் விவூர், கஜாக், ஹுய், உஸ்பேக், குல்க்ஸ், தஜீக், ததால் முதலிய 10 சிறுபான்மை திசேய இனங்கள் இந்த மதத்தை நம்புகின்றன.


(மசூதியில் தொழுகை செய்யும் ஹுய் இன மக்கள்)