திபெத்தின் புவியியல் நிலைமை

中国国际广播电台

சின்காய் திபெத் பீடபூமியின் இயற்கை தனிச்சிறப்புடையது. உலகின் பீடபூமிகளில் இது முக்கிய இடம் வகிக்கின்றது. புவியின் 3வது துருவம் என்று இது புகழப்படுகின்றது.

மிக உயர்ந்த உயரமும், அதனால் குளிரான காலநிலையுமே இதற்கு காரணம். கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இது அமைந்து, உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. பீடபூமியிலும் பல் உயர் மலைகள் இருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்த 4500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் நடு பகுதியில் சராசரி வெப்பநிலை பூஜியம் திகிரிசெல்சியஸுக்கு கீழ் இருக்கின்றது. மிகவும் வெப்பமான காலத்திலோ, சராசரி வெப்பநிலை 10 திகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது.

சின்காய் பீடபூமியில், கடல் மட்டத்திற்கு மேல் 6000 மீட்டர் முதல் 8000 மீட்டர் வரை உயரத்தில் பல சிகரங்கள் உள்ளன. உலகில் மிக இளமையான பீடபூமியாகவும், பல ஆசிய ஆறுகளின் பிறப்பிடமாகவும் இது திகழ்கின்றது.