திபெத் இனம்
中国国际广播电台

திபெத் இன மக்கள் தான் திபெத்தில் முக்கியமாக வசிக்கின்றனற். திபெத் மொழி, ஹான் திபெத் மொழி தொகுதியில் திபெத் மியன்மர் பிரிவின் திபெத் மொழி கிளையில் சேர்க்கப்பட்டது. வேளாண் மற்றும் நாற்றங்கால் வளர்ப்பு தொழிலில் திபெத் மக்கள் முக்கியமாக ஈடுபடுகின்றனர். நகரவாசிகள் பெரும்பாலோர் கைவினைத் தொழில், தொழில் துறை, வணிகம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

திபெத் புத்த மதத்தை திபெத் மக்கள் நம்புகின்றனர். அவர்கள் உற்சாகமுடையவர். ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவராவர். திபெத் பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. பாட்டு பாடுவதுடன் பல்வகை நடனங்களையும் ஆடுகின்றனர். பட்டு அல்லது பருத்தி துணியில் முழுக்கைச் சட்டையை அவர்கள் அணிகின்றனர். ஆண்கள் தொய்வான அங்கியை அணிகின்றனர். பெண்கள் கையில்லாத நீண்ட அங்கி அணிகின்றனர். உடலின் நடுவில் இடைவார் உண்டு. திருமணம் செய்த பெண்களின் இடுப்பு மீது அழுக்கு படாதிருக்க வானவில் நிறங்களில் ஆடை அணிகின்றனர். ஆண்களும் பெண்களும் பின்னல் பின்னி சடை போட்டுக் கொள்கின்றனர். நகைகளை அணிய ஆண்களும் பெண்களும் விரும்புகின்றனர். வெவ்வேறு பிரதேசங்களில் ஆடைகளில் வேறுபாடு இருக்கின்றது. சி பா எனும் வாற் கோதுமை அல்லது அவரை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு திபெத்தின மக்களின் முக்கிய உணவு ஆகும். பட்டர் தேநீர், பால் தேநீர், கோதுமை மது ஆகியவற்றை குடிக்கவும், ஆட்டிறச்சியையும் மாட்டிறச்சியையும் சாப்பிடவும் விரும்புகின்றனர். பண்டைக் காலத்தில் திபெத் பீடபூமியில் வசித்த மக்கள், பிணத்தை மண்ணில் புதைத்தனர். தற்போது அவர்கள் எரிக்கவும் செய்கின்றனர். சிலர் celestial burial விரும்புகின்றனர்.