லோபா இனம்
中国国际广播电台


லோபா இனம் தென்கிழக்கு திபெத்தின் லோயு பிரதேசத்தில் வசிக்கின்றது. வேளாண் தொழில் இதன் முக்கிய தொழிலாகும். மூங்கில் பின்னுவதில் இவ்வினத்தவர் தேர்ச்சி பெற்றவர். கையில்லாத கம்பளி சட்டையை ஆண்கள் அணிகின்றனர். அவர்களுடைய தொப்பி கரடி தோல் அல்லது பிரம்பினால் தயாரிக்கப்படுகின்றது. பெண்கள் வட்டமான கழுத்துப் பட்டையுடைய குறுகிய சட்டையையும், உடலை ஒட்டிக் கொண்ட இடுப்பு உடையையும் அணிகின்றனர். காலின் பின் பகுதி துணியால் சுற்றப்பட்டது. லோபான இன மக்கள் முக்கியமாக மக்காச்சோளம், அரிசி, கோதுமை ஆகியவற்றை உண்ணுகின்றனர்.