தொழில் துறை
中国国际广播电台

முன்பு, திபெத்தில் கம்பளம், சட்டை, காலணி முதலிய பாரம்பரிய கைத் தொழில்கள் மட்டுமே இருந்தன. நவீன தொழில் ஒன்றும் இல்லை. 1951ஆம் ஆண்டு திபெத் அமைதியாக விடுதலை அடைந்த பின், குறிப்பாக 1959ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தத்துக்குப் பின், திபெத்தில் தொழில் துறை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. தற்போது, எரிசக்தி, உலோகம், நிலக்கரி, இயந்திரம், வேதியியல் தொழில், வனத் தொழில், தீக்குச்சி, பிளாஸ்திக், நெசவு, உணவுப் பொருள், தொல், தாள் உற்பத்தி முதலிய தொழில்கள் திபெத்தில் உருவெடுத்துள்ளன. இவற்றில் பெரும்பாலும் சிறிய தொழில் நிறுவனங்களாகும். முக்கியமாக லாசா, லிஞ்சி, ழக்காசர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. புதுமுறை வணிகம், சுற்றுலா, அஞ்சல், உணவு சேவை, பண்பாட்டு பொழுதுபோக்கு, தகவல் தொழில் நுட்ப முதலிய புதிய தொழில்கள் திபெத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

2003ஆம் ஆண்டு, திபெத்தின் மொத்த தொழில் உற்பத்தி மதிப்பு 277 கோடி யுவானாகும். திபெத்தின் பொருளாதாரத்தில் தொழில் துறை வகிக்கும் விகிதம் 15 விழுக்காடாகும். இதை அதிகரிக்கும் பொருட்டு, எதிர்காலத்தில், தொழில் துறையை திபெத் ஆக்கப்பூர்வமாக வளர்த்து, தொழில் கட்டுமானத்தைச் சரிப்படுத்தி, சுரங்கத் தொழில், வனத் தொழில், கால்நடை உற்பத்தி ஆகிய 3 மூலவளங்களைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்ப சீர்திருத்தத்தை விரைவுப்படுத்தும்.