கால்நடை வளர்ப்பு தொழில்
中国国际广播电台

கால்நடை வளர்ப்பு திபெத் வேளாண்மையில் முக்கியான தொழிலாகும். இது நீண்ட வரலாறுடையது. வளர்ச்சி வாய்ப்பு மிகுந்தது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் மொத்தம் 8 கோடியே 20 இலட்சம் ஹெக்டர் நிலப்பரப்புக்கு இயற்கையான புல்வெளிகள் உள்ளன. இதில் 5 கோடியே 60 இலட்சம் ஹெக்டர் புல்வெளி பயன்படுத்தப்படக் கூடியது. நாட்டின் முழுப்பரப்பிலும் இது ஐந்தில் ஒரு பகுதியாகும். சீனாவில் 5 பெரிய கால்நடை வளர்ப்பு பிரதேசங்களில் திபெத் ஒன்றாகும். தவிர, புல்வெளிகளின் வகை இங்கு அதிகமானக உள்ளது. 90 விழுக்காட்டு மேற்பட்ட புல்வெளி உயர் மலை புல்வெளியாகும் இங்கு விளையும் புள்களின் சத்து மதிப்பு அதிகம்.

கால்நடை வளர்ப்பு தொழில் திபெத்தின் மொத்த வேளாண் உற்பத்தியில் 60 விழுக்காடு வகிக்கின்றது. திபெத்திய எருமை, திபெத்திய செம்மறியாடு, திபெத்திய வெள்ளாடு ஆகியவை இங்கே வளர்க்கப்படும் முக்கிய கால்நடை வகையாகும். திபெத்திய எருமை பீடபூமியிலே மட்டும் உள்ள கால்நடையாகும். குளிர் எதிர்ப்பு தன்மை, ஈரம் விரும்பும் தன்மை ஆகியவை இதற்கு உண்டு. பீடபூமியின் கப்பல் என்று புகழ் பெற்ற திபெத்திய எருமையை, போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். திபெத்திய செம்மறியாடுகளின் குளிர், வறட்சி ஆகியவற்றை தாக்குப் பிடிக்கும் தன்மை சிறந்தது. பொருளாதார பயன் மிக்கது. திபெத்தில் இது அதிகமாக வளர்க்கப்படுகின்றது.