வனத் தொழில்
中国国际广播电台

திபெத்தில் வன பரப்பு 63 இலட்சம் ஹேக்டராகும். தன்னாட்சி பிரதேசத்தின் முழு நிலப்பரப்பில் இது 5 விழுக்காடு வகிக்கின்றது. சீனாவின் சராசரி நிலையைக் காட்டிலும் இது மிகவும் தாழ்ந்தது. ஆனால், திபெத்தில் மர பாதுகாப்பு அளவு 140 கோடி கன மீட்டரைத் தாண்டி சீனாவில் 2வது இடம் வகிக்கின்றது. சீனாவில் மிக முக்கியமான காட்டு மரங்களின் அடித்தளமாக திபெத் திகழ்கின்றது. யாருசாபு ஆற்றின் நடு மற்றும் கீழ் பகுதி, சான் நன் பிரதேசம், கிழக்கு திபெத்தின் பள்ளத்தாக்கு பிரதேசம் ஆகியவற்றில் வன வளம் அமைந்துள்ளது. காட்டு மரங்கள் அதிகமாக உள்ள வனத்தில் spruce, fir ஆகிய taiga மரங்கள் பரவலாக வளர்ந்துள்ளன. இவை வேகமாக வளரக் கூடியவை.. உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுபவை..

உயிரின வாழ்க்கை சூழலை உருவாக்குவதில் திபெத் அரசு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது. 18 தேசிய நிலை மற்றும் மாநில நிலை இயற்கை காப்பு பிரதேசங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. தன்னாட்சி பிரதேச முழு நிலப்பரப்பில் இவை 33.9 விழுக்காடாகும். இதனால், திபெத்தின் மெலிந்த பீடபூமி உயிரின வாழ்க்கையும் நகர மற்றும் கிராம வாழ்க்கை சூழ்நிலையும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது, திபெத்தின் உயிரின வாழ்க்கை அடிப்படையில் இயற்கை நிலையில் உள்ளது. சீனாவில் மிகவும் சிறப்பாகப் பாதுகாப்பப்பட்ட பிரதேசமாக திபெத் திகழ்கின்றது.