திபெத் உதவி திட்டப்பணி
中国国际广播电台

உலகின் கூரை என அழைக்கப்படும் திபெத்தில் வரலாறு மற்றும் இயற்கையின் காரணமாக சமூக-பொருளாதார வளர்ச்சி நீண்டகாலமாக தாழ்ந்த நிலையிலேயே இருந்தது. 1984ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை, திபெத்தில் 43 திட்டப்பணிகளில் நடுவண் அரசும் 9 மாநிலங்களும் 48 கோடி யுவானை முதலீடு செய்தன. 1994ஆம் ஆண்டு, 3வது திபெத் உதவி பணி பற்றிய கலந்தாய்வு கூட்டத்தை அரசு நடத்தி, திபெத்தில் 62 உதவி திட்டப்பணிகளை உறுதிப்படுத்தியுள்ளது. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வனத் தொழில், எரியாற்றல், போக்குவரத்து, மின்னஞ்சல், செய்தித் தொடர்பு ஆகிய துறைகளுடன் இத்திட்டப்பணிகள் தொடர்புடையன. மொத்த முதலீட்டுத் தொகை 486 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. தற்போது, இந்தத் திட்டப்பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு, இயங்கத் துவங்கி, சிறப்பான பொருளாதார மற்றும் சமூக பயனைத் தருகின்றன.

இந்தத் திட்டப்பணிகள் திபெத்தின் பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் அதேவேளையில், பீடபூமியில் வசிக்கும் மக்களின் நிலையான வாழ்க்கை முறைகளை மாற்றி வருகின்றன. தற்போது, தன்னாட்சிப் பிதசேத்தின் தலைநகர் லாசாவில், நகரவாசிகள் நாள்தோறும் செயற்கை கோள் மூலம் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். ஒட்டுமொத்த வேளாண்மை வளர்ச்சியினால், கிழக்குப் பகுதியின் 3 ஆறுகளின் பள்ளத்தாக்கில் இருந்த தரிசு நிலம், உயிர்த்துடிப்புடைய பாலைவன பசுஞ்சோலையாக மாறியுள்ளது. தென் திபெத்தில், உயர் கல்வி கட்டிடத்தில், கிராமப்புற குழந்தைகள் மூத்த தலைமுறைகளின் கனவுகளுடன் அறிவைக் கற்றுக்கொள்கின்றனர். சலவைக்கல்லால் கட்டப்பட்ட போத்தலா மாளிகை சதுக்கத்தில், ஆண்டு முழுவதும் வண்ணதக் கொடிகள் பறக்கின்றதன. அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கே வருகை தருகின்றனர். உலகிற்கு தனது நிலைமையை வெளிப்படுத்தும் பனிபீடபூமியின் ஜன்னலாக இது மாறியுள்ளது.