நாமு சோ
中国国际广播电台

சோ என்பது திபெத் மொழியில் ஏரி என்பதாகும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 1500 ஏரிகள் உள்ளன. மொத்த நிலப்பரப்பு 24 இலட்சம் சதுர கிலோமீட்டராகும். சீனாவில் மொத்த ஏரி நிலபரப்பில் இது மூன்றில் ஒரு பகுதியாகும். பீடபூமியிலுள்ள ஏரிகள் பரந்து விரிந்தவை. ஆழமானவை. நீர் வளம் அதிகமாக உள்ளது.

நாமு சோ இங்குள்ள மிகப் பெரிய ஏரியாகும். நாமு சோ என்பது ஆகாய ஏரி அல்லது கடவுள் ஏரி என்று பொருள்படும். திபெத் புத்தர் மதத்தின் புனித இடமாகவும் இது திகழ்கின்றது. லாசா நகரின் தாங்சுன் மாவட்டத்துக்கும் நாசுயே பிரதேசத்து பானகா மாவட்டத்துக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இதற்கு தென்கிழக்கில் உயரமான ஆண்டு முழுவதும் பனி கொண்ட நியன் தாங்குலா மலையின் முக்கிய பகுதியாகும். வடக்கில் தொடர்ச்சியான பீடபூமி குன்று ஆகும். இது புல்வெளியினால் சூழப்பட்டது. ஒரு பெரிய அற்புத கண்ணாடி போல் தோன்றுகின்றது. நீல நிறமான ஆகாயம், பச்சை நிற ஏரி நீர், வெள்ளை நிறப் பனி, பச்சைபசும் புல், மேய்பவரின் கம்பளி கூடாரம், வண்ணத்து மலர்கள் ஆகியவை சேர்ந்து இங்குள்ள மனத்தைக் கவரும் அழகான காட்சியை உருவாக்குகின்றன.