தாசோ கோயிலும் பாலாங் பாதையும்
中国国际广播电台

லாசா நகர மையத்தில் அமைந்துள்ள தாசோ கோயில் கி. பி. 647ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தாங் வம்சத்தின் இளவரசி வென் செங்குடன் திருமணம் செய்வதற்காக, திபெத் மன்னர் சுன்சான்காபு இதனைக் கட்டினார். கோயிலில் புத்தர் மாளிகை, புத்தர் பாட அறை ஆகியவை உள்ளன. புத்தர் மாளிகை 4 மாடிகளுடையது. தங்கம், வெண்கலம் ஆகியவற்றினால் இதன் உச்சி கட்டப்பட்டது. தாங் வம்ச கட்டிட பாணியும், நேபாள மற்றும் இந்திய கட்டிட பாணியும் உடையது. பெரிய மாளிகையில் சான்ஆன் நகரிலிருந்து இளவரசர் வென் செங் கொண்டு வந்த 12 வயதான சிக்கியமோனி சிலை வைக்கப்பட்டது. தாழ் வாரத்திலும் மாளிகையின் சுற்றுச் சுவரிலும் இளவரசி வென் சங் திபெத்துக்குள் நுழைந்த நிலைமை, கட்டுக்கதை ஆகியவற்றை வர்ணிக்கும் ஓவியங்கள் மிகவும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன.

தாசோ கோயிருக்கு அருகிலுள்ள பாச்சியோ பாதையில், உள்ளூர் வணிகர்கள் நேபாள மற்றும் இந்திய வணிகர்கள் பற்றிய சிறிய கடைகள் அதிகமானவை. பல்வேறு தனிச்சிறப்புடைய கைவினை பொருட்களை இங்கே வாங்கலாம். பாதையில் தலை தாழ்த்தி வணங்கும் நம்பிக்கையுடையவர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இத்தகைய வழிபாடு முறை புத்தர் மீதான மத நம்பிக்கையுடையவரின் வரம்பற்ற பக்தியை காட்டுகின்றது. மிகவும் நெடுந்தூரத்திலிருந்து வந்தவர்களும் உள்ளூர் நகரவாசிகளும் அவர்களில் இடம்பெறுகின்றனர். விடியற்காலையில், தாசோ கோயில் வளாகத்தை சுற்றி தலை தாழ்த்தி வணங்கவதற்குச் சுமார் அரை மணி நேரம் தேவைப்படுகின்றது. நாள்தோறும் பலர் இதனை செய்த பிறகு தான், வீட்டுக்குத் திரும்பி, காலை உணவு சாப்பிட்டு, வேலை செய்கின்றனர். வேறு இடத்து மக்கள் நிழல் குத்துச் சண்டை பயிற்சி செய்வதை போல், தலை தாழ்த்தி வணங்குவதும் ஒரு வகை உடல் பயிற்சியாகும். தவிர, இது மத நம்பிக்கை நடவடிக்கையாகவும் திகழ்கின்றது. லாசா நகரவாசிகளின் தனிச்சிறப்புடைய வாழ்வு வடிவமாக இது மாறியுள்ளது.