சாஷ்லுங்பு கோயில்
中国国际广播电台

சாஷ்லுங்பு கோயில் திபெத் புத்த மதத்தின் மஞ்சள் கிளையின் மிக பெரிய கோயிலாகும். இது 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுடையது. பான் சான் லாமா மத மற்றும் அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளும் மையம் இதுவாகும்.

மலை பகுதிக்கு பக்கத்தில் இது கட்டப்பட்டது. 50க்கும் அதிகமான புத்த பாட அறைகளும் வேறு சுமார் 200 அறைகளும் இதில் அமைந்துள்ளன. புத்தர் மிலரின் மாளிகையின் உயரம் 30 மீட்டராகும். 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 26.2 மீட்டர் உயரமான புத்தர் மிலர் உட்காரும் நலையில் வெண்கல சிலை நிறுவப்பட்டது. 335 கிலோகிராம் தங்கம், ஒரு இலட்சத்து 15 ஆயிரம் கிலோகிராம் வெண்கலம் ஆகியவற்றினால் இது அமைக்கப்பட்டது. சிலையில் 1400க்கும் அதிகமான வைரங்களும், முத்துக்களும், அம்பர்களும் வைக்கப்பட்டுள்ளன.