கல்வி நிலைமை
中国国际广播电台

திபெத்தில் இலவச கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. துவக்கப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் செலவிட வேண்டிய கல்வி கட்டணத்துக்கு அரசு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த சலுகை திபெத்தில் மட்டுமே உள்ளது. பழைய திபெத்தில், புதுமையான பள்ளி எதுவும் இல்லை. தற்போது, திபெத்தில் 4 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

திபெத்தின் கல்வி வளர்ச்சிக்காக, 1985ஆம் ஆண்டு முதல், வேறு 21 மாநிலங்கள் மற்றும் நகரங்களில் திபெத் மாணவர்களுக்கான வகுப்பை நடுவண் அரசு அமைத்துள்ளது. திபெத்துக்காக இவை சுமார் பத்தாயிரம் பல்வகை திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளித்தன. அவர்களுடைய உணவு, உடை, விடுதி, கல்வி ஆகியவற்றுக்கான கட்டணத்தை அரசே கட்டிவிடுகின்றது.

2003ஆம் ஆண்டு இறுதி வரை, திபெத்தில் பல்வேறு நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 1011 ஆகும். கல்வி நிலையங்கள் 2020 ஆகும். பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 53 ஆயிரம் 400 ஆகும். 91.8 விழுக்காட்டு சிறுவர்கள் துவக்க பள்ளியில் சேர்ந்தனர். படிப்பறிவு இல்லாதவர் விகிதம் 30 விழுக்காட்டுக்கீழ் குறைந்துள்ளது. வறுமை பிரதேசத்தில் கல்வி வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு உதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு விருப்ப திட்டப்பணி 1992ஆம் ஆண்டு திபெத்தில் நடைமுறைப்படுத்தப்ப்ட்டது. இது வரை 180 விருப்ப துவக்கப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளது. சுமார் 36 ஆயிரம் மாணவர்கள் உதவி பெற்றுள்ளனர்.