திபெத் புத்தர் மதமும் லாமா கோயிலும்
中国国际广播电台

திபெத் புத்தர் மதம் முக்கியமாக சீனாவின் திபெத், மங்கோலியா ஆகிய தேசிய இனப் பிரதேசங்களில் பரவியுள்ளது. பொதுவாக இது லாமா கோயில் என்று அழைக்கப்படுகின்றது. பண்டைய இந்தியா, சீனாவின் உள் பிரதேசம் ஆகியவற்றிலிருந்து திபெத்துக்குள் நுழைந்த புத்த மதம், உள்ளூர் பண்டைய மதத்துடன் இணைந்து தனிச்சிறப்புடைய திபெத் புத்த மதமாக உருவெடுத்துள்ளது.

சீன ஹான் இனத்தின் புத்த மதம், இந்தியாவின் புத்த மதம் ஆகியவற்றின் செல்வாக்குடன், திபெத் புத்த மதக் கோயில்கள் பெரும்பாலும் ஹான் இன மாளிகை போன்றே கட்டப்பட்டுள்ளன. பொதுவாகக் கூறின், இவற்றில் எல்லாம் பெரிய அளவிலான தூண்களிலும் சுவர்களிலும் ஓவியங்கள் உண்டு. இவற்றில் லாசா நகரிலுள்ள போத்தலா மாளிகை, சே பான் கோயில் சின்காய் மாநிலத்திலுள்ள தால் கோயில் ஆகியவை பண்டைய கட்டிடக் கலைச் சிறப்புக்கு சீரிய எடுத்துக்காட்டாகும்.

இந்தக் கோயில்கள் திபெத் புத்த மதத்தின் அற்புதத்தை வெளிப்படுத்துகின்றன. புத்தர் மாளிகை உயரமானது. வண்ண வண்ண புத்த கொடிகள் பறக்கின்றன. தூண்களில் பல்வேறு நிறமுடைய கம்பளங்கள் சுற்றப்பட்டுள்ளன. மங்கலான வெளிச்சத்துடன் மிகவும் அற்புதமாகத் தோன்றுகின்றது. கோயிலின் வெளியில், சுவர்கள் சிவப்பு நிறமாக உள்ளன. சிவப்பு சுவர்களில் வெள்ளை அல்லது பழுப்புநிறமான பட்டைகள் தீட்டப்பட்டுள்ளன. புத்த பாட அறை, கோபுரம் ஆகியவை வெள்ளை நிறமானது. வெள்ளை சுவரில் கறுப்பு நிற ஜன்னல் இருக்கின்றது. இத்தகைய நிற பேதம் கட்டிடத்தின் அற்பத தன்மையைக் காட்டுகின்றது.

(திபெத் மத துறைவி)