திபெத் மக்களின் மத நம்பிக்கை
中国国际广播电台

திபெத் மக்கள் மத நம்பிக்கை சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கின்றனர். திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள திபெத், மன்பா, லோபா, நசீ ஆகிய இன மக்களில் பெரும்பாலோர் திபெத் புத்த மதத்தை நம்புகின்றனர். தவிர, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். தற்போது, திபெத்தில் மொத்தம் 1700 திபெத் புத்த மத வழிபாட்டு இடங்கள் உண்டு. கோயிலில் வசிக்கும் துறவிகள், சன்னியாசினிகள் ஆகியோரின் எண்ணிக்கை சுமார் 46 ஆயிரமாகும். மேலும் திபெத்தில் 3 மசூதிகளும் ஒரு கத்தோலிக தேவாலயமும் உள்ளன. இந்த மதங்களைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை தலா 3000, 700 ஆகும். பல்வேறு மத நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன். மத நம்பிக்கையுடையவரின் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவர்களின் மத நம்பிக்கையும் முற்றிலும் மதிக்கப்பட்டுகிறது.

திபெத் மக்களின் பழக்கவழக்கங்கள் மதிப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டது. திபெத்தினமும் இதர சிறுபான்மை தேசிய இனங்களும் தத்தமது பாரம்பரிய வழக்கத்துடன் வாழ்ந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையும் சுதந்திரமும் கொண்டுள்ளன. சொந்த தேசிய இன ஆடை, உணவு, வீடு ஆகியவற்றின் பாரம்பரிய பாணியையும் வடிவத்தையும் பேணிக்காக்கும் அதேவேளையில், திருமணம் முதலிய துறைகளில் புதுமையான நாகரிகம், நலவாழ்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் புதிய பழக்க வழக்கத்தையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர். திபெத் தன்னாட்சி பிரதேசத்தில், திபெத் புத்தாண்டு, சகடாவா விழா, வாங்கோ விழா, சுயே தன் விழா ஆகிய பாரம்பரிய விழா கொண்டாட்டங்கள், பல கோயில்களில் மத விழாக்கள் ஆகியவை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதோடு, பல்வேறு சீனா மற்றும் உலகளாவில் புதிய விழா கொண்டாட்டங்களும் கொண்டாடப்படுகின்றன.


(அழகான மதக் கொடிகள்)