தாங்கா
中国国际广播电台

தாங்கா என்பதற்கு திபெத் மொழியில் துணி, பட்டு, தாள் ஆகியவற்றில் தைத்த அல்லது தீட்டிய வண்ண ஓவியம் என்று பொருள். திபெத் இனத்தின் பண்பாட்டு தனிச்சிறப்பு ஓவிய வகைகளில் ஒன்றாகும்.

தாங் வம்சத்தில் இளவரசி வென் செங் திபெத்துக்குள் நுழைந்த போது, நெசவு உட்பட உற்பத்தி தொழில் நுட்பங்களைக் கொண்டு வந்தார். தாங்காவில் பயன்படுத்தப்படும் துணியைப் பார்த்தால், அப்போது இத்தகைய நெசவு தொழில் நுட்பம் திபெத்தில் பரவலாயிற்று என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

ஒளி ஊடுருவாத தாது மற்றும் செடி வர்ணம், விலங்கு பிசின், மாட்டுக் கொழுப்பு பித்தம் ஆகியவை தாங்காவில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய சிறப்பு வர்ண கலவை, திபெத் பீடபூமியின் வறட்சியான காலநிலை ஆகியவற்றினால், பல நூறு ஆண்டுகள் கழிந்த போதிலும் நிறம் மங்காமல் இன்னும் அழகாக உள்ளது. புத்தம் புதியதாகக் காட்சியளிக்கின்றது.

தாங்கா, சமூக வரலாறு பற்றிய ஓவியமாகும். இதன் பொருள் மதக் கதை உட்பட பல துறைகளுடன் தொடர்புடையது.