சுயோ ஹுவா
中国国际广播电台

சுயோ ஹுவா என்பது ஒரு வகை சிலை வடிப்பாகும். புத்தர் மதக் கதை, சாக்கியமுனி கதை, வரலாற்று கதை, கட்டுக்கதை ஆகியவற்றை இது வர்ணிக்கின்றது. சூரியனும் நிலாவும், மலரும் புல்லும், பறவையும் விலங்கும், கட்டிடமும் கூடாரமும், புத்தர்கள் முதலிய உருவங்கள் இதில் உண்டு. இதனை உருவாக்கும் முறை மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு சிலையும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. மிக உயர்ந்த கலை தரமானது.

நடு மற்றும் சிறிய அளவிலான சுயோ ஹுவா அடிக்கடி பூசை அறையில் வைக்கப்பட்டது. இவை பல்வகைப்பட்டவை. நிறம் அழகானது. கண்களுக்கு விருந்து அளிக்கின்றது. இத்தகைய சுயோ ஹுவா அடிக்கடி பல பத்து அல்லது பல நூறுகளாக ஒன்று சேர்த்து வைக்கப்பட்டன. மிகவும் தனிப்பட்ட தன்மை உடையது.